1990 லிருந்து இந்த 31 வருடத்தில் உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வாழும் முறையே எல்லாருக்கும் மாறிவிட்டது. இன்னும் 20 வருடம் போனால் உலகம் எப்படியிருக்கும்? இது 2045 ல் நடக்கும் கதை. இந்தியா முழுவதும் ஏகப்பட்ட மாற்றங்களை அடைந்த காலம். எங்கும் கணினி மயம். எலெக்ட்ரானிக் யுகத்தின் தாக்கம் பல இடங்களில் வியாபித்திருக்கின்றன. ஆனால் மனிதர்களின் மனங்கள் கூட மாறிவிட்டிட்டிருக்கும். ஆனாலும் சில அடிப்படை மரபுகள் மாறாமல் அப்படியே வழி வழியாய் பின்பற்றப்பட்டும் வருகின்றன. அப்படித்தான் இந்தக் கதையில் வரும் மாந்தர்கள் நடந்துகொள்கிறார்கள். ஒரு பெட்டி கூட இதில் கதை முழுதும் ஒரு பாத்திரமாக வருகிறது.