முப்பத்தைந்து ஆண்டுக்காலம் நான் ஆசிரியப் பணியில் பெற்ற அனுபவங்களை இங்கு கல்விச் சிந்தனைகளாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். நான் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை ஆசிரியராக இருந்திருக்கிறேன். ஆசிரியர் பட்டயக் கல்வி வகுப்புகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.. தலைமை ஆசிரியர், DIET நிறுவன முதல்வர் பதவி ஆகிய பொறுப்புகளில் நான் நிலைமைக்கேற்ப கல்வி நிறுவனங்களில் பல மாறுதல்களைச் செய்தது வரவேற்பைப் பெற்றது.. பல்வேறு வகுப்பு புத்தகங்களுக்கு ஆசிரியராகவும் மேற்பார்வையாளரகவும் இருந்த அனுபவம் எனக்கு இருக்கிறது.. இந்த அனுபவங்கள் என்னை இந்த நூலை எழுத வைத்தன.