登入選單
返回Google圖書搜尋
பயங்கரவாதம்: நேற்று - இன்று - நாளை / Bayangaravadham: Netru - Indru - Naalai
註釋

"இன்றைய உலகம் எதிர்கொள்ளும் சவால்களுள் முக்கியமானது, பயங்கரவாதம். இன்னொரு 9/11 நடைபெறாமல் தடுக்க வேண்டுமானால், பயங்கரவாத நிகழ்வுகளை எதிர்பார்க்கவும், அதனை எதிர்கொள்ளவும் நம்மை நன்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

இனம், கருத்தியல், மதம் போன்ற காரணங்களுக்காகப் பயங்கரவாத வழிமுறையைத் தேர்வு செய்தது அந்தக் காலம். இன்று, புதிய வகை பயங்கரவாதிகள் சாத்தியமுள்ள அத்தனை வழிகளையும் பயன்படுத்தி பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஜிஹாதி பயங்கரவாதிகள் என்றழைக்கப்படுகின்றனர்.

மனிதர்களைக் கொல்வது மட்டுமல்லாமல், பொருளாதார, தொழில்நுட்ப, சமூகக் கட்டமைப்புகளையும் இவர்கள் சீர்குலைக்கின்றனர். மத உரிமை, சமூகக் கடமை என்றெல்லாம் மயக்கும்படி பேசி, இளைஞர்களை இவர்கள் ஈர்க்கிறார்கள். மதத்தையும் அதன் லட்சியங்களையும் பாதுகாக்கிறோம் என்னும் பெயரில், நாசகார ஆயுதங்களைப் பயன்படுத்தி அப்பாவி சிவிலியன்களைக் கொல்கிறார்கள்.
பயங்கரவாதத்தின் வேர்களையும் கிளைகளையும் தேடிச் செல்லும் இந்நூல் இந்தியாவின் தலையாயப் பிரச்னையான மாவோயிஸ்டுகள் தொடங்கி உலகளவில் அச்சுறுத்தல் ஏற்படுத்திவரும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் வரை அனைத்தையும் நுணுக்கமாக ஆராய்கிறது."