எந்தச் செயலானாலும் அச்செயலின் தாக்கத்தை விட அச்செயலின் நோக்கம் முதன்மை பெறுகிறது. செயல் நற்செயலாக இருந்தால் அதன் தாக்கமும் நன்மையாகவே அமையலாம், ஆனால், அச்செயலுக்கு பின்னால் மறைந்திருக்கும் நோக்கம், தீயதாக இருந்தால் அது நயவஞ்சகத்தனமாகிவிடும்.
எனவே, செயற்களத்தில் எண்ணத்தூய்மை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. உளத்தூய்மை இல்லாமல் பகட்டுக்காக ஆற்றப்படுகின்ற செயல்களின் தீய விளைவுகள் யாவை, எந்தெந்த வடிவிலெல்லாம் பகட்டு மனிதனிடம் ஆதிக்கம் செலுத்தி அவனைப் பாடாய்ப் படுத்துகிறது என்பதையும் எடுத்துக் கூறி, அவனிடம் களையப்பட வேண்டிய பலவீனங்கள் யாவை, பகட்டு மறைந்து பக்தி மலர மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெடுப்புகள் யாவை, மனிதனை திருப்திப்படுத்தும் (ரியா) நிலையிலிருந்து இறைவனை திருப்திப்படுத்தும் (ரிழா) நிலைக்கு உயரவேண்டும் என்றால் நாம் மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள் யாவை என அற்புதமாகவும் குர்ஆன், சுன்னாவின் மேற்கோள்களுடனும் தந்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்கள்.
IFT CHENNAI