"ஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள்.
ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலும் சனாதன தர்மம் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேர்ந்தபோது, புதிய எழுச்சியுடன் பக்தி இயக்கம் தோற்றுவித்து தெள்ளு தமிழால் வேதத்தைப் புதுமை செய்தவர்கள் ஆழ்-வார்-கள்.
எந்தக் குலத்தில் பிறந்தாலும், எத்தகைய தொழில் செய்தாலும் இறைவனிடம் சரணாகதி அடைந்துவிட்டால் பரமனை அடைவது மிகவும் எளிது என்பதை ஆழ்வார்கள் தங்கள் வாழ்க்கையின் மூலமாகப் போதித்தனர். எளிய தமிழில் பாசுரங்களைப் பாடி மக்களை ஈர்த்தனர். வைணவத்தை இயல்பான வழியில் வளர்த்தனர்.
இத்தகைய பெருமைக்குரிய புண்ணியசீலர்களின் வர-லாறை எளிய தமிழில் வழங்கியிருக்கும் இந்நூலின் ஆசிரியர் வேணு-சீனிவாசன் ஏற்கெனவே ‘வைஷ்ணவம் - என்சைக்ளோபீடியா’ நூலின் மூலம் அனைத்துத் தரப்பினரால் பாராட்டப் பட்டவர்.
நாம் என்றென்றும் இதயத்தில் போற்றி வணங்கக்கூடிய பெருமை மிக்க பன்னிரண்டு ஆழ்வார்களின் சிலிர்ப்பூட்டும் திவ்ய சரிதத்தை அழகு தமிழால் அள்ளித் தந்திருக்கிறார்."