登入選單
返回Google圖書搜尋
Killadi Siruvargal
註釋

நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கோ அல்லது பேரப்பிள்ளைகளுக்கோ கதை சொல்லியிருக்கிறீர்களா? நான் இரவு படுக்கப் போகும் முன் தினமும் ஒரு தொடர்கதை போல அவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன். அதுதான் இந்த சிறுவர் நாவலாக இப்போது உங்கள் கைகளில் தவழ்கிறது. தமிழில் நிறைய சிறுவர் நூல்கள் வருவதில்லை என்ற குறையை இந்நூல் போக்கும் என நம்புகிறேன்.

இரண்டு பையன்களும், இரண்டு சிறுமிகளும் எப்படி ஓர் ஏலியன் தீவுக்கு எதிர்பாராத விதமாய்ச் சென்று, அங்கு பலவிதமான அனுபவங்களைப் பெற்றுத் திரும்புகிறார்கள் என்பதை இந்நாவல் சொல்கிறது. எந்த ஒரு செயலுக்கும் ஒரு தன்னம்பிக்கை வேண்டும் என்பதை இது பறைசாற்றுகிறது. தீய சக்திகள் அவர்களுக்கு முட்டுக்கட்டை போடும்போது அவர்கள் அதை எப்படி எதிர்த்து வெற்றிகொள்கிறார்கள் என்பதையும் இந்நாவலில் காணலாம்.