登入選單
返回Google圖書搜尋
Easya Pesalam English
註釋

வணக்கம். நான் தமிழ்வழியில் கல்வி பயின்றவன்தான். ஆங்கிலம் படிக்க நான் எடுத்துக்கொண்ட முயற்சிகளும், முப்பத்தைந்து ஆண்டுப் பணியில், அரசுக்கல்வி நிறுவனங்களில் ஆசிரியராகவும், முதல்வராகவும் ஆங்கிலம் போதித்து நான் பெற்ற பட்டறிவும் இந்நூலை எழுத உதவின. இரண்டு வெகுஜனப் பத்திரிகைளான அவள் விகடன் மற்றும் மல்லிகை மகள் ஆகியவற்றில் நான் தொடராக எழுதியவைதான் இந்தத் தொகுப்பு..

சிலருக்கு ஆங்கிலம் பேச, எழுத தயக்கங்கள் உள்ளன. அந்த தயக்கத்தைப் போக்குவதுதான் இந்நூலின் நோக்கம். தமிழ்வழி, ஆங்கிலவழி பயின்றவர்களும் இதில் அடக்கம். ஏனெனில் என் வகுப்பில் இவர்களின் பலம் எது, பலவீனம் எது என்று ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுத்திருக்கிறேன். ஆங்கில சேனல்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். பேசுகிறவர்கள் யாரும் நல்ல ஆங்கிலம் பேசுகிறவர்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் தைரியமாக வெளுத்துக்கட்டுகிறார்கள். அந்த மனோபாவம் இருக்கவேண்டும். அடிப்படை தெரிந்துகொண்டால் இன்னும் நலமாக இருக்கும்..

அந்த அடிப்படையைத்தான் அத்தியாயங்களாக வைத்திருக்கிறேன். A, an, the பயன்படுத்துவதில்தான் நிறையப்பேர் கோட்டைவிடுகிறார்கள். Follow up words, Signal words, என்ற அத்தியாயங்கள் உங்கள் மொழித்திறனை மேம்படுத்தும். Active voice, Passive voice பற்றி நன்றாக தெரிந்துகொண்டாலே பாதி ஆங்கிலம் வந்த மாதிரி. அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன்.Isn’t it என்பதன் பல வடிவங்கள் குறித்து ஓர் அத்தியாயத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. நுனிநாக்கு ஆங்கிலம் பேசலாமா என்று ஓர் அத்தியாயம் இருக்கிறது. அவற்றில் உள்ளபடி பேசிப் பழகுங்கள். You will feel the difference and gain confidence.

யாரும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் இல்லை. நானும் அப்படித்தான். நீங்களும் அப்படியே. ஏனெனில் மொழிப்புலமை பயிலப்பயிலத்தான் வரும்.

அதனால் ஈஸியா பேசிப் பழகலாம் வாருங்கள்!