நாகரீகம் என்ற பெயரில் மனிதம் மறைந்து வரும் மானிட சமுதாயத்தில் மதிப்பு என்னவோ பணத்திற்கு தானே தவிர குணத்திற்கு இல்லை, மானிடம் மறந்து போன அன்பு, நப்பு, காதல், சமூக அக்கறைகளை ஒரு எழுத்தாளன் என்ற முறையில் எனக்கு தெரிந்த வாத்தைகள் கொண்டு வரிகளாக்குவதில் பெரும் மகிழ்ச்சி கொண்டு காகிதப்பசி இந்த எனும் கவிதை தொகுப்பினை பதிவு செய்கிறேன். சிறு வயது முதலே கவிதைகள் பல படித்து நானும் கவிஞனாக வேண்டும் என்று சிறு சிறு கிறுக்கல்களோடு வரிகள் தொகுத்து இந்த கவி மாலையை தொடுத்துள்ளேன். இது எனது முதல் படைப்பு. எனது அன்னையின் தாலாட்டு கவிதைகளில் கேட்டுப்பெற்ற தமிழ் மொழி ஆளுமையும், தந்தையின் தலைமை சிந்தனையும், சமூகம் தந்த படிப்பினையுமே என்னை ஒரு சிற்பி ஆக்கியது. அடுத்த படைப்பிலும் உங்களோடு உறவாடும் களிப்போடு...