21ம் நூற்றாண்டு சந்தித்த மிகப் பெரிய சவால் கொரானா காலமாகும். உலகமே முடங்கிக் கிடந்தது. வீட்டை விட்டு வெளியே வரவே மக்கள் அஞ்சினார்கள். முடங்கி விட்டார்கள். நானும் அவ்வாறுதான் வீட்டுக்குள் முடங்கி விட்டேன். ஆனால் எதையாவது செய்து சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பது நோக்கமாக இருந்தது. என்னுடைய பணி எழுதுவது. குறுநாவல்கள் எழுத ஆரம்பித்தேன். ஆறு குறுநாவல்கள் எழுதினேன். இந்தத் தொகுதியில் நூலில் மூன்று குறுநாவல்கள் இருக்கின்றன. இந்த நாவல்களில் வருகின்ற கதாபாத்திரங்கள் கூட கொரானாவினால் பாதிக்கப்பட்டவர்கள் தான். அவர்கள் எவ்வாறு இயங்குகிறார்கள் என்பதுதான் கதைக்களமாக இருக்கிறது.