பிசினஸ் வெற்றிக்கதைகள் எப்போதுமே நமக்கு உற்சாகத்தை தருபவை. அதிலும் குறிப்பாக எந்த பின்னணியும் இல்லாமல் தொழில் தொடங்கி முழுக்க முழுக்க தங்களது சொந்த முயற்சியிலேயே வளர்ந்தவர்களின் வெற்றிப் பயணம் நமக்கு நம்பிக்கையூட்டுவதாக அமைவதோடு பல நல்ல பாடங்களையும் கற்றுத்தரும்.
அந்த வரிசையில் சில வாரங்கள் தொடராக நான் எழுதியதன் தொகுப்புதான் நீங்கள் இந்த நூலில் படிக்கப்போகும் கவின்கேர் ரங்கநாதனின் வெற்றிக்கதை.
அந்த வெற்றிக்குச் சொந்தக்காரான எனது நீண்ட கால நண்பரான சி.கே. ரங்கநாதனை நேரில் சந்தித்து அவரோடு சில மணிநேரங்கள் விரிவாக உரையாடி அத்தனை அனுபவங்களையும் இங்கு நான் தொகுத்து தந்திருக்கிறேன்.
இது, கண்டிப்பாக நீங்கள் படிக்க வேண்டிய ஒரு நூல். படித்து முடித்தவுடன் உங்கள் வாழ்விலும் ஒரு உத்வேகம் பிறக்கும் என்பதற்கு நான் உறுதி தருகிறேன்.