登入選單
返回Google圖書搜尋
Oru Valaagam Oru Kaadhal
註釋நான் ஆங்கிலத்தில் எழுதிய A Dalit’s Love (Available in Amazon and Pustaka)) என்ற நாவலின் மொழியாக்கம் இது. மூலத்தை எழுதிய நானே இதை மொழி பெயர்க்கும் போது, சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாவலில் இருக்கும் நிறை, குறைகள் கண்ணுக்குத் தெரிந்தன. அதனால் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஆங்கில மூலத்தில் வருகிற கதாபாத்திரங்களையே வைத்துக்கொண்டு புதிய நாவலைப் போல எழுதிவிடுவது என்று தீர்மானித்தேன். அதனால் மூலத்தில் இருந்த சில காட்சிகள், உரையாடல்கள் புதிதாக அமைக்கப்பட்டன. ஆபகநி எனப்படும் இந்தக் கல்வி நிலையம்தான் இந்நாவலின் ஹீரோ.. வெளி உலகத்தில்இருக்கிற எல்லா ஆசாபாசங்களும் அங்கே வேலை செய்கிறவர்களுக்கும், படிப்பவருக்கும் உண்டு. காதல், கடமை, ஏமாற்றுதல், ஏமாறுதல், சதி போன்ற செயல்கள் அவர்களுக்கும் உண்டு. ஒரு தலித் லெக்சரர் ஓர் உயர்ஜாதிப் பெண்ணைக் காதலித்து, அதனால் வரும் விளைவுகளைச் சந்திக்கிறான். அதே கேம்பஸில் ஒரு மாணவி சில துன்பங்களுக்கு ஆளாகி அவற்றை எவ்வாறு சமாளிக்கிறாள் என்பதும் ஒரு கிளைக்கதை. மாணவர்களின் சேர்க்கை, அவர்களின் தேர்வுகள் ஆகியவற்றில் கூட சில சதிகள் பின்னிருந்து இயக்குகின்றன. நீங்கள் இந்த ஆபகநியையும், அது இருக்கிற ஊரையும் தேடினால் கிடைக்காது. ஏனெனில் அது ஒரு கற்பனையூர். ஆனால் அங்கே நடைபெறுகிற செயல்கள் உண்மை சார்ந்தவை.