பாவம் செய்யும் இயல்பில் மனிதன் படைக்கப்பட்டதாக கூறும் இஸ்லாம் பாவமன்னிப்புக்கான கதவுகளையும் திறந்தே வைத்திருக்கிறது. தவறிழைக்கும் மனிதனுக்கு திருத்திக் கொள்ள வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
பாவமன்னிப்புக் குறித்து உலக சமயங்களும் மதங்களும் வெவ்வேறு பார்வையை கொண்டுள்ள வேளையில், பாவம் குறித்தும் பாவமன்னிப்புக் குறித்தும் இஸ்லாம் தெளிவான, நீதியான பார்வையைக் கொண்டுள்ளது.
பாவமன்னிப்புக்கான வழிமுறைகளையும் அதற்கான நிபந்தனைகளையும் தொகுத்துத் தந்துள்ளார். பாவ மன்னிப்பால் மானுடம் அடையும் நன்மைகளையும் பதிவு செய்யத் தவறவில்லை.
பாவம் செய்தவனை எந்தெந்த அம்சங்கள் அவனை அதிலிருந்து மீள விடாமல் தடுக்கிறது என்பதையும் விவரித்திருக்கிறார்.
இறுதியாக இந்நூல் பாவமன்னிப்புக்கான சில துஆக்களை பதிவு செய்து நிறைவடைகிறது.
IFT CHENNAI